Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிளஸ்-2, 10-ம் வகுப்புக்கு இனி ரேங்க் முறை இல்லை.. பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு?

பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ரேங்க் முறையில் மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.


பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இன்று துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் போதே பொதுத் தேர்வில் ரேங்க் முறையை கைவிட்டு, சி.பி.எஸ்.இ பின்பற்றும் முறையை தமிழக அரசும் பின்பற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் முடிவில் இனி ரேங்க் முறை பின்பற்றப்படாது. இதனால், முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாது.


மாணவர்களின் மதிப்பெண் குறித்த விவரங்கள் அவர்களுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். 10-ம் வகுப்பு தேர்வுகளுக்கும் இதே முறை பின்பற்றப்படும்.
அதேபோல், தேசிய அளவிலான தேர்வுகளைக் கருத்தில் கொண்டு பிளஸ்-1 வகுப்புக்கும், பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இது குறித்து விரைவில் முடிவு எடுப்போம்" என்றார். நாளை பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close