Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் புதிதாக ஏழு மணல் குவாரிகள்

தமிழகத்தில் புதிதாக 7 மணல் குவாரிகளை அமைக்கவுள்ளதாக , தமிழக அரசு அறிவித்துள்ளது.

Sand Quarries

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் தமிழக அரசே மணல் விற்பனை நிலையம் அமைத்து, அதனை நடத்தும் என்று கடந்த 5-ம் தேதி முதல்வர் அறிவித்தார்.
இதையடுத்து, மணல் விற்பனை நிலையங்களை அரசின் நேரடி மேற்பார்வையில் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பொதுமக்களுக்கு மணல் கிடைப்பதிலுள்ள சிரமங்கள் நீங்குவதுடன் குறைந்த விலையில் தேவைக்குத் தக்கபடி கிடைக்க வழிவகை ஏற்படுத்தப்படும். 

தமிழ்நாட்டில் இயந்திரங்கள் மற்றும் மனிதசக்தியை பயன்படுத்தி இயங்கி வருகின்ற மணல் குவாரிகளுடன், மேலும் 7 புதிய மணல் குவாரிகள் அமைக்கவும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது. புதிய மணல் குவாரிகளை பரவலாக அமைத்து பொதுமக்களுக்கு மணல் தடையின்றிக் கிடைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தேவைப்படும் இடங்களில், ஆற்றங்கரைக்கு அருகில், அரசு மணல் விற்பனை நிலையங்கள் அமைத்து மணல் விற்பனை செய்யப்படும். 

Edappadi Palanisamy


இதுவரை மணலுக்கான விற்பனைத் தொகையினை வங்கி வரைவோலை மூலமாக மட்டுமே செலுத்தும் நடைமுறை இருந்து வருகிறது. இனி வருங்காலங்களில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாகவும் பணம் செலுத்துவதற்கு, மணல் விற்பனை நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறை விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.
வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்படும். பொதுப்பணித் துறையிலும் மணல் விற்பனைக்குப் போதுமான பணியாளர்களைப் பயன்படுத்தி, மணல் விற்பனை செம்மையாக நடைபெற நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும்.

கட்டுமானப் பணிகளுக்கு மணல் தேவையின் அவசியம் கருதி ஆற்று மணலுக்கு மாற்றாக, செயற்கை மணல் உற்பத்தியை ஊக்குவித்து அதன் பயன்பாட்டை அதிகரிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்துவதைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்று தமிழக அரசு கூறியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close