Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் பரபரப்பு... ஷாப்பிங் மால்... நள்ளிரவில் சுற்றிவளைத்த கமாண்டோக்கள்! #VikatanExclusive

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில், இன்று இரவு 2 மணி அளவில், அந்த ஷாப்பிங் மாலைச் சுற்றி காவல் துறையின் வாகனங்கள் அரண் அமைத்து நின்றன. திடீரென்று வந்த ஆயுதம் தாங்கிய கமாண்டோ படையினர், ஷாப்பிங் மாலுக்குள் செல்லும் பாதைகளை மறித்து, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

 

 

 

வெளியே இருந்து யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த நேரம், மாலுக்குள்ளிருந்து இரவுக்  காட்சி சினிமா முடிந்து வெளியே வந்த பொதுமக்கள், கமாண்டோ படையினர்  சுற்றிவளைத்திருப்பதைக் கண்டு அச்சப்பட்டனர். கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை எடுத்துக்கொண்டு வெளியே வர முயன்ற அவர்கள், மாலுக்குள் ஏதோ விபரீதம் நடக்கிறது என்று நினைத்து, பதற்றம் அடைந்தனர். அது, தமிழக காவல் துறை கமாண்டோ பிரிவின் பாதுகாப்புப் பயிற்சி ஒத்திகை எனப் பின்னர் தெரியவந்தது.

 அந்தப் பரபரக் காட்சிகளின் புகைப்படப் பதிவு இங்கே...

 - படங்கள்: ஆ.முத்துக்குமார் 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close