Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகின! 1,813 பள்ளிகள் 100 சதவிகிதத் தேர்ச்சி #Update

தமிழகம் முழுவதும் பிளஸ்2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் தேர்வு முடிவுகள் வெளியாகின.1813 பள்ளிகள் 100 சதவிகிதத் தேர்ச்சி பெற்றுள்ளன.

 

* தஞ்சை மாவட்டத்தில் 31,319 பேர் தேர்வு எழுதியதில் 28,699 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், தேர்ச்சி விகிதம் 91.63 சதவிகிதம்.

* புதுச்சேரி காரைக்காலில் தேர்வு எழுதியவர்கள் 15,583 பேர். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சேர்த்து தேர்ச்சி விகிதம்- 86.68%(கடந்த ஆண்டைவிட 1% குறைவு). புதுச்சேரி- 87.83%(கடந்த ஆண்டை விட 0.25% குறைவு) காரைக்கால்- 80.46(கடந்த ஆண்டைவிட 5.42% குறைவு) தேர்ச்சி பெற்ற மாணவர்கள் - 5,994 பேர். மாணவிகள் - 7,514 பேர். தேர்ச்சி விகிதம் - 86.68% கடந்த ஆண்டைவிட 1% குறைவு. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் - 73.7%(கடந்த ஆண்டைவிட 3.3% குறைவு) புதுச்சேரி - 73.7% (2.44% குறைவு). காரைக்கால் -73.70% (6.23% குறைவு). புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட பாடவாரியாக 200/200 மதிப்பெண் பெற்றவர்கள் மொத்தம் - 301 பேர். அதிகமாக வணிகவியல் 84 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணக்கு பதிவியலில் 63 பேர்.  இயற்பியல் மற்றும் வேதியியல் தலா 2 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* சிவகங்கை மாவட்டத்தில் 96.17 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் 4ஆம் இடம் பிடித்துள்ளது.

* விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  199 பள்ளிகளில் பயின்ற 25,196 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். 24,654 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* மதுரை மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் 39,022 பேர். தேர்ச்சி பெற்றவர்கள் 36,529 பேர். தேர்ச்சி விகிதம் 93.61 சதவிகிதம்.  மாவட்டத்தில் மொத்தமுள்ள 300 பள்ளிகளில் 18,793 மாணவர்களும், 20,229 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில், 17,025 மாணவர்களும், 19,504 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* திண்டுக்கல் அரசுப் பள்ளி மாணவர்கள் 88.02 % சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* புதுச்சேரியில் தேர்வு எழுதிய மாணவர்கள் 15,583 பேர். இதில் 13,508 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 5,994 பேர். மாணவிகள் 7,514 பேர். மொத்தத் தேர்ச்சி விகிதம் 86.68 சதவிகிதம். காரைக்காலைச் சேர்த்து 1% தேர்ச்சி விகிதம் குறைவு.

* கடலூர் மாவட்டத்தில் 31,527 பேர் தேர்வு எழுதினர். இதில் ஆண்கள் 14,649 பேர். பெண்கள் 16,878 பேர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 26.589 பேர்.  ஆண்கள் 11,658 பேர். பெண்கள் 14,931 பேர். மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 84.33 சதவிகிதம். இதில் பெண்கள் 88.46 சதவிகிதம். ஆண்கள் 79.58 சதவிகிதம். 11,658 பேர் மாணவர்களும், 14,931 பேர் பெண்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்ற ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் 0.3 சதவிகிதம் குறைவு.

* விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 42,066 பேரில் 36,076 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 85.76 சதவிகிதம். இது கடந்த ஆண்டை விட 3.71 சதவிகிதம் குறைவு.

* நெல்லை மாவட்டத்தில் +2 தேர்வில் 95.51% தேர்ச்சி .

நெல்லை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 38,271 பேரில் 36,551 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.76% கூடுதலாகும். நெல்லை மாவட்டத்தில் 9 அரசு பள்ளிகள், 20 அரசு உதவி பெறும் பள்ளிகள், 58 மெட்ரிக் பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் மாவட்டத்தில் 305 பள்ளிகள் உள்ளன.

* ராமநாதபுரம் மாவட்டம், தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்திருக்கிறது. இந்த மாவட்டத்தில் 15,934 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதில், 96.77 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர். கடந்த ஆண்டு 9வது இடத்திலிருந்து இம்முறை 2- ம் இடத்திற்கு ராமநாதபுரம் முன்னேறியுள்ளது.

* தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 21,411 மாணவர்களில் 20468 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 96.44 சதவிகிதம்.

* தேனி மாவட்டத்தில் 14,918 பேர் தேர்வு எழுதினர். 14,311 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.93 சதவிகிதம். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 95.11 சதவிகிதம். கடந்த ஆண்டில் இருந்து இந்த ஆண்டு .8 சதவிகிதம் அதிகம்.

* கன்னியாகுமரி மாவட்டத்தில் 92 சதவிகிதம் தேர்ச்சி

* கடலூர் மாவட்டத்தில் மந்தமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

* அரியலூர் மாவட்டத்தில் 88 சதவிகிதம் தேர்ச்சி. அரியலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகள் விவரம். அரியலூர் சி.எஸ்.ஐ பள்ளி மாணவன் சதிஸ் குமார் 1176 மதிப்பெண். ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கஸ்தூரி 1176 மதிப்பெண். ஆலத்தியூர் வித்யா மத்தீர் பள்ளி மாணவி சந்தோஷினி 1175 மதிப்பெண். ஜெயங்கொண்டம் பாத்திமா மேல்நிலைப்பள்ளி அன்பு மலர் 1168.

* சிவகங்கை மாவட்டம், தேர்வு எழுதியவர்கள் 16,670 பேர். தேர்ச்சியடைந்தவர்கள் 16,033 பேர். தேர்ச்சி விகிதம் 96.17 சதவிகிதம். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 95.07 சதவிகிதம்.

* புதுக்கோட்டை மாவட்டத்தில் 155 பள்ளிகளைச் சேர்ந்த  20,457 மாணவ, மாணவிகள்  பேர் தேர்வு எழுதினர். கடந்த கல்வி ஆண்டில் மாவட்டத்தில் மொத்தமாக 93.01 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். நடப்பு கல்வியாண்டில் 92. 16 சதவிகிதம் தேர்ச்சி. கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. தேர்வு எழுதிய பள்ளிகளில் 37 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

* விருதுநகர் மாவட்டம் 97.85% தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது.  மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அருப்புக்கோட்டை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் 199 பள்ளிகளில் பயின்ற 25,196 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். 24,654 பேர் தேர்ச்சி  பெற்றனர்.

* திண்டுக்கல் அரசு பள்ளி மாணவர்கள் 88.02 % சதவீதம் தேர்ச்சி.

* கரூர் மாவட்டத்தில் 11,404 பேர் தேர்வு எழுதியதில், 10,829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், கடந்த கல்வியாண்டில் 93.52 சதவிகிதத்தில் இருந்த தேர்ச்சி விகிதம் இந்த கல்வியாண்டில் 94.95 சதவிகிதமாக உயர்ந்து, 1.43 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 104 பள்ளிகளில் 39 பள்ளிகள் நூறு சதவிகித தேர்ச்சி அடைந்துள்ளனர்.

* 1,180 மதிப்பெண்களுக்கு மேல் ஏ கிரேடு
* 1,151- 1180 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பி கிரேடு

* மாநகராட்சி பள்ளிகள் 90.06 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.

* ஆங்கிலோ இந்தியன் பாடப்பிரிவில் படித்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96.06 சதவிகிதம்.

* தஞ்சாவூர், கோவையில் பிளஸ்2 தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அதிகாரி வராததால் தேர்வு முடிவு வெளியாகவில்லை.

* வேலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் தேர்வெழுதிய 24,497 பேரில் 19,677 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* தமிழகம், புதுச்சேரியில் 92.1 சதவகித மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டைவிட 0.7 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மாணவர்களைவிட 5.2 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* 94.5 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* 89.3 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* நகராட்சிப் பள்ளிகள் 87.2 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

* பழங்குடியினர் பள்ளிகள் 86.65 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

* சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் 97.77 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* 1126 முதல் 1150 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு சி கிரேடு வழங்கப்பட்டுள்ளது.

* தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 86 சதவீதம் ஆகும்.
* தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் யாரும் 200 மதிப்பெண் எடுக்கவில்லை.

* 97.85 சதவீதம் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றது. 33 மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் 84 சதவீதம் தேர்ச்சி பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது.

* வேதியியல் பாடத்தில் 1123 பேரும், இயற்பியல் பாடத்தில் 187 பேரும், வணிகவியல் பாடத்தில் 8301 பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 5597 பேரும், கணிதம் பாடத்தில் 3656 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில், இந்தாண்டு பிளஸ்2 தேர்வை 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்தாண்டு முதல் பொதுத் தேர்வுகளுக்கு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் தர வரிசைப் பட்டியலை வெளியிடும் முறையைத் தமிழக அரசு ரத்துசெய்துள்ளது. எனவே, மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாது. 

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய செங்கோட்டையன், 'ரேங்கிங் எனப்படும் தரவரிசைப் பட்டியல், மாணவர்களிடையே உளவியல்ரீதியாக மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இதைத் தடுக்கவே  இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம். மேலும் 11ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வை நடத்த ஆலோசனை செய்துவருகிறோம்' என்றார்.

 குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் மனச்சோர்வடைந்து, தவறான முடிவுகள் எடுக்காமல் இருக்க, 104 என்ற இலவச தொலைபேசி சேவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த எண்ணுக்கு போன் செய்து, ஆலோசனைகள் பெறலாம். +2 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதற்கு மூன்று இணையதளங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரேங்கிக் முறை ரத்து செய்யப்பட்டதால் முதல் மூன்று இடங்களில் பிடித்தவர்கள் பட்டியல் வெளியாகது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close