Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

3 ஆண்டுகளுக்கு முன் கட்டாந்தரை... தற்போது வளம் கொழிக்கும் பூமி..! மீண்டும் அசத்திய ராமநாதபுரம் காவலர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், தனி ஆயுதப்படை முகாம் உள்ளது. இங்கு, 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். கமுதி செல்லும் வழியில் கோட்டைமேடு என்ற இடத்தில், சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த முகாமில், காவலர் பயிற்சிக் கல்லூரியும் அமைந்துள்ளது. 

Ramnad

கட்டாந்தரையாகவும் காட்டுக் கருவேல மரங்கள் நிறைந்தும் இருந்தது இப்பகுதி. இந்தச் சூழல், அங்கு பணியாற்றியவர்களுக்கும் காவலர் பயிற்சிக்கு வந்தவர்களுக்கும் வெறுமையையும் சோர்வையும் தந்தது. இந்நிலையை மாற்ற, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் காவல்துறை அதிகாரிகளால்  முயற்சி எடுக்கப்பட்டது. 

ramnad police

முகாமினுள் காவலர்களின் பயன்பாட்டுக்குப் போக எஞ்சியிருந்த இடங்களில் எல்லாம் கட்டாந்தரையும் அதைத் துளைத்து வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிவந்தனர். அந்த இடங்களில் எல்லாம் பலன் தரும் மரங்களை நடத் தொடங்கினர். இதற்கு உடனடியாக பலன் கிடைக்காத நிலையில், காவலர்கள் சோர்ந்துவிடாமல் இருக்க உயர் அதிகாரிகள் அவ்வப்போது இங்கு வந்து காவலர்களுடன் தோட்டப் பணிகளில் ஈடுபட்டு, ஊக்கமளித்தனர்.

ramnad police
 

இதன் பலனாக, சுமார் 20 ஏக்கர் வறண்ட நிலம் பலன் தரும் தோப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு மா, பலா, வாழை, கொய்யா, சப்போட்டா, நெல்லி, முருங்கை, பப்பாளி, தேக்கு என 12,500 மரங்களை வளர்த்து, இப்பகுதியை காவல்துறையினர்  வளம் கொழிக்கும் சோலையாக மாற்றி, சாதனை படைத்துள்ளனர்.

 

 

kamuthi
 

இந்தக் காவலர் தோட்டத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் காவலர் நல நிதிக்கு அளிக்க இருப்பதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார். நேற்று, இந்தத் தோட்டத்தைப் பார்வையிட்ட டி.ஐ.ஜி கபில் சராட்கர், தோட்டம் உருவாக ஊக்கமாகச் செயல்பட்ட மாவட்ட  காவல் அதிகாரிகள் மணிவண்ணன், பாசுமணி, சக்தி கணேசன் மற்றும் காவலர்களைப் பாராட்டினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close