Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி.தினகரனை ஆஜர்படுத்த நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு!

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில், டி.டி.வி.தினகரனை ஜூன் 8ஆம் தேதி ஆஜர்படுத்த காவல்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

1995, 1996-ம் ஆண்டுகளில், டி.டி.வி.தினகரனின் வங்கிக் கணக்குகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டது. இதையடுத்து, தினகரன் மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவுசெய்ததோடு, அவருக்கு 28 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. அந்த அபராதத்தை ரத்துசெய்யக்கோரி, டி.டி.வி.தினகரன் தாக்கல்செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்துவருகிறது. கடந்த மார்ச் 22ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, டி.டி.வி.தினகரன் நீதிமன்றத்தில் ஆஜரானார். மீண்டும் இந்த வழக்கு, கடந்த 10ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் மட்டும் ஆஜரானார். ஆனால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தினகரன், சுதாகரன் ஆகியோர் ஆஜராகவில்லை. அப்போது, சுதாகரனுக்கு வாரன்ட் பிறப்பித்த நீதிமன்றம், ஜூன் 7ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.டி.வி.தினகரன் ஆஜராகவில்லை. திகார் சிறையில் தினகரன் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் 8ஆம் தேதி டி.டி.வி.தினகரனை கண்டிப்பாக ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close