Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் 11 பேர் உயிரிழந்த சோகம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே, கே.பேட்டை என்ற பகுதியில், கார் மீது எதிரே வந்த லாரி ஒன்று மோதியது. இதில் காரில் இருந்த இரண்டு பெண்கள், ஒரு குழந்தை உள்பட  ஏழு பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி கோயிலுக்குச் சென்றுவிட்டு, கேரளாவுக்கு திரும்பிய போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


அதேபோல், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, இந்திரா நகர் ஒத்த வீடு என்ற இடத்தில், அரசு டவுன் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். 

Accident


திண்டுக்கல் மாவட்டம், மேற்கு கோவிந்தாபுரம், வள்ளலார் தெருவைச் சேர்ந்த விஜய் ஆனந்த் (50), வேளாண் துறையில் பணிபுரியும் இவர் தனது மனைவி பாக்யலட்சுமி, மகன் முத்துராமு, உறவினர் ஜெயபாரதி ஆகியோருடன் ராமேஸ்வரம்  சென்று விட்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். காரை விஜய் ஆனந்த் ஓட்டி வந்தார். 


மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், மாரநாடு பாலம் அருகே இந்திரா நகர் ஒத்த வீடு என்ற இடத்தில் வரும் போது, எதிரே வந்த மதுரை  - இடைக்காட்டூர் அரசு டவுன் பஸ் மீது, நேருக்கு நேர் மோதியது. இதில் காரின் முன்புறம் அமர்ந்திருந்த விஜய்ஆனந்த், பாக்கியலட்சுமி ஆகியோரும் பின்புறம் அமர்ந்திருந்த மகன் முத்துராமுவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 


உறவினர் ஜெயபாரதி, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து, அரசு டவுன் பஸ் டிரைவர் மனோகரனிடம் திருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close