Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் : 17 பேர் கைது..!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.


தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. இந்தக் கடைகளை ஊருக்குள் திறப்பதற்கு தமிழக அரசு முயற்சி செய்துவருகிறது. இதற்கு எதிராக, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான பெண்களே போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். சில இடங்களில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டும் வருகின்றன.

இருப்பினும் டாஸ்மாக் கடைகளை ஊருக்குள்  திறப்பதில் தமிழ்நாடு அரசு குறியாக உள்ளது. ராமேஸ்வரம் மாவட்டத்தில் ராமர்பாதம், சம்பை காந்தாரி அம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்க மாவட்ட நிர்வாகம் முயன்று வருகிறது. இதனை எதிர்த்து அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். 

அதேபோல், கோயம்புத்தூர் கருமத்தம்பட்டியில் செயல்படும் குறிஞ்சி மதுபானக்கடை மற்றும் பறையங்காடு மதுபானக்கடை இரண்டையும் மூடக்கோரி, கரும்பத்தம்பட்டி மக்கள் இன்று காலையிலிருந்து  உண்ணாவிரதம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போரட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை காவல்துறை கைது செய்தனர். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக் கூடாது என்று சமீபத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தர்மபுரி மாவட்டத்திலும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னேரியில் பெண்கள், பொதுமக்களின் போராட்டத்தைத்  தொடர்ந்து வட்டாசியர் டாஸ்மாக் கடைக்கு சீல் வைத்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close