Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அரசு குவாரிகளால் அதிகரிக்கும் மணல் விலை!' - அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவர கணக்கு

மணல் குவாரி

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தினாலும் மணல் விலை குறையவாய்ப்பில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மணல் குவாரிகளை அரசே நடத்தும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு மகிழ்ச்சியளித்தாலும் அதற்குள் பல உள்விவகாரங்கள் ஒளிந்திருக்கின்றன. குறிப்பாக, குறைந்த எண்ணிக்கையில் செயல்படும் மணல் குவாரிகளால் மணல் விலை பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மணல் தேவை அதிகரித்துள்ள நிலையில் தமிழக பொதுப்பணித்துறை விரல்விட்டு எண்ணும் வகையில் ஏழு மணல் குவாரிகளை மட்டுமே திறந்துள்ளது. இதன்காரணமாக மணல் லோடு எடுக்க  லாரிகள் நாள்கணக்கில் குவாரிகள் காத்துக்கிடக்கின்றன. இது, மணல் விலையை உயர்த்தும் சூழ்நிலையை ஏற்படுத்தும் என்கிறார் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல ராசாமணி. 

 செல்ல ராசாமணிஇதுகுறித்து அவர் கூறுகையில், "தமிழகம் முழுவதும் 38 அரசு மணல் குவாரிகள் இயங்கிவந்தன. இதில் 17 குவாரிகளுக்கு அனுமதி காலம் முடிவடைந்துவிட்டன. இதனால் 21 குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வந்தன. இதனால் ஒரு லோடு மணல் எடுப்பதற்கு 7 நாள்கள் வரை லாரிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு 40 சதவிகிதம் கட்டுமான பணிகள் முடங்கின. இந்தச் சூழ்நிலையில் கடந்த 29.4.2017ல் 21 அரசு மணல் குவாரிகள் மூடப்பட்டன. இதனால் தமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதோடு தமிழகம் முழுவதும் உள்ள 75,000 மணல் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டன. இதனால் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கிளீனர்கள், கட்டுமான தொழிலாளர்கள் உள்பட 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச்சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மணல் குவாரிகளை அரசே நடத்தும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால் மணல் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், முன்பை விட மணல் விலை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, திருச்சி மண்டலத்தில் 6 குவாரிகளும், விழுப்புரம் மண்டலத்தில் ஒரு குவாரி மட்டுமே செயல்படுகின்றன. இதனால், நீண்ட தூரம் லாரிகள் செல்ல வேண்டியதுள்ளது. மேலும் 10 நாள்கள் வரை மணல் லோடுக்காக லாரிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மணல் விலை அதிகரிக்கும். 

இரண்டு யூனிட் மணலை 1,050 ரூபாய்க்கு அரசு விற்கிறது. இதில் மணல் விலை 800 ரூபாய், லோடிங் சார்ஜ் 210 ரூபாய், வரி 40 ரூபாயாகும். இந்த விலை கொடுத்து மணல் வாங்க நீண்ட தூரத்துக்கு லாரிகள் செல்ல வேண்டியதுள்ளது. இதனால், அரசு நிர்ணயித்த மணல் விலையை விட இதர செலவு அதிகமாகிறது. மேலும், ஆன்லைன் புக்கிங் மூலம் மணல் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது, மணல் பிசினஸில் முறைகேடுகள் தடுக்கப்படும்" என்றார். 

தமிழ்நாடு அரைபாடி டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலச்சங்க பொதுச் செயலாளர் சட்டபொறியாளர் எஸ்.எஸ்.பாலாஜிஎஸ்.எஸ்.பாலாஜி கூறுகையில், "கடந்த 2003ம் ஆண்டு அரசு மூலம் மணல் குவாரிகள் இயக்கப்பட்டன. மணல் குவாரிகளை அரசு நடத்தினாலும் லிப்டிங் கான்டிராக்ட் தனியாரிடம் கொடுக்கப்பட்டது. இதுதான் மணல் பிசினஸில் மாஃபியாக்களின் தலையீடுக்கு வழிவகுத்தது. மேலும், செகண்ட் சேல்ஸ் மணல் மூலம் கொள்ளைக்கு வழிஏற்படுத்தப்பட்டது. மணல் குவாரிகளில் ஒரு யூனிட் மணல் 525 ரூபாய்க்கு விற்றாலும் அந்தவிலை நிர்ணயிக்கப்படுவதில்லை. அதில் உள்ளூர், வெளியூர் லாரி என்ற வேறுபாடு கடைப்பிடிக்கப்பட்டது. உள்ளூரில் மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை சமாளிக்க அரசியல் கட்சிகளின் தலையீடும் இருந்தது. இதுபோன்ற இதர பஞ்சாயத்து காரணமாக அரசு நிர்ணயித்த விலையில் மணல் விற்கமுடியாத நிலை இருந்துவந்தது. தனியார் வசம் இருந்த லிப்டிங் கான்டிராக்ட் எடுப்பவரே மணல் விலையை நிர்ணயிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது. இதனால், மணல் விலை அதிகரித்தது. தற்போது, அரசே மணல் குவாரிகளை நடத்துவதாக அறிவித்தாலும் அது, முறையாக செயல்படுத்தப்படவில்லை. ஸ்வைப்பிங் மிஷின் மூலம் மணல் விலை பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதால் சில குவாரிகளில் மணல் கட்டணத்தை டி.டி.யாக பெறுவதில்லை. இதனால், மணல் லோடு எடுக்க முடியாமல் லாரிகள் காத்திருக்கின்றன. 

செகண்ட் சேல்ஸ் மணல் மூலம் முன்பெல்லாம் இரண்டரை யூனிட் மணல் லாரிகளில் ஏற்றப்படும். தற்போது, இரண்டு யூனிட் மணல் மட்டுமே ஏற்றபடுவதால் மணல் விலை அதிகரிக்கும். முன்பு, இரண்டரை யூனிட் மணல் 18000 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆனால், தற்போது, அரசு நிர்ணயித்த மணல் விலை 1,050 என்றாலும் லாரி வாடகை, டீசல் செலவு, டிரைவர், கிளீனர் சம்பளம் உள்ளிட்ட இதர செலவினம் காரணமாக இரண்டு யூனிட் மணல் விலை 20 ஆயிரத்தைத் தாண்டும். இதனால், அரசு மணல் குவாரிகளை நடத்தினாலும் மணல் விலை குறையாது. மேலும், மணல் தட்டுப்பாடு ஏற்படும். ஏற்கெனவே மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மணல் குவாரிகளின் எண்ணிகையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் டீசல் உள்ளிட்ட இதர செலவினங்கள் குறையும். மேலும், மணல் குவாரிகளில் உள்ளூர், வெளியூர் லாரி என்ற பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இரண்டு யூனிட் வழங்குப்படுவது சாலை விபத்தை தவிர்க்கும். இதுபோன்ற மணல் பிசினஸில் உள்ள சட்டசிக்கல்களுக்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close