Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக மின் வாரியத்துக்கு 85 ஆயிரம் கோடி ரூபாய் நிதி.!

தமிழ்நாடு மின் வாரியத்துக்கு, மத்திய அரசின் ஊரக மின்மயமாக்கல் கழகம் ரூ.85,723 கோடி நிதி உதவி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

மின்

மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றால் செயல்படுத்தப்பட உள்ள மின்னுற்பத்தி, தொடரமைப்பு மற்றும் பகிர்மான திட்டங்களுக்காக ரூ.85,723 கோடிக்கான இரு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. மேலும், முதல் தவணையாக ரூ.10,453 கோடிக்கான அனுமதி கடிதத்தை, அமைச்சர் தங்கமணியிடம் ஊரக மின்மயமாக்கல் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் பி.வி.ரமேஷ் வழங்கினார்.

சென்னையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக மின் துறை அமைச்சர் பி.தங்கமணி, தமிழ்நாடு மின்வாரியம், மத்திய அரசின் ஊரக மின்மயமாக்கல் கழகத்தின் உயர் அலுவலர்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. 'தற்போது கையெழுத்தான ஒப்பந்தம் மற்றும் முன்னதாக பவர் பைனான்ஸ் கார்ப்பரே‌ஷன் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் சேர்த்தால், அடுத்த 6 ஆண்டுகளில், தமிழக மின் திட்டங்களின் மொத்த முதலீடு ரூ.1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். இதன்மூலம் 2023–ம் ஆண்டு தமிழகம் மின்துறையில் முதன்மையான மாநிலமாக மாறும்' என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close