Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கின்னஸ் சாதனை புரிந்த ஈஷாவின் ‘ஆதியோகி சிலை’..!

கோவை, ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள, ‘ஆதியோகி சிலை’ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆதியோகி


கோவை மாவட்டத்தில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஆதியோகி சிலையை, உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு கொண்ட சிலை என்று அறிவித்து, அங்கீகாரம் அளித்துள்ளது கின்னஸ் புத்தகம். கடந்த பிப்ரவரி மாதம், 112 அடி உயரத்தில், 81 அடி அகலத்தில், 147 அடி நீளத்தில் அமைந்துள்ள சிலையின் பிரமாண்ட திறப்பு விழாவினை மோடி தலைமைதாங்கி நடத்தி வைத்தார்.


தற்போது இச்சிலைக்கு ’உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு சிலை’ என்ற அங்கீகாரத்தை கின்னஸ் புத்தகம் வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பினை அங்கீகரித்து மத்திய அரசு அந்தத் தலத்தினை அதிகாரபூர்வ சுற்றுலாத்தலமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், ‘ஆதியோகி’ போன்றே மேலும் மூன்று சிலைகளைத் திறக்க திட்டமுள்ளதாக, ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈஷா மையம் 2006-ம் ஆண்டு, அதிக மரக்கன்றுகளை நட்டதற்காக, கின்னஸ் சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close