Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அமைச்சர்களுடன் நிலத்தடி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி!

சென்னையில் திருமங்கலம் - நேரு பூங்கா இடையே  7.4 கிலோ மீட்டர் தூர  சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் பயணிகள் சேவை இன்று தொடங்குகிறது.  

chennai metro rail
 

இந்த மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கி வைத்தார்.  இவ்விழாவில், தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் வெங்கைய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

Chennai metro rail
 

சென்னை போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 45 கி.மீ தொலைவுக்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நிலத்தடியில் நடந்து வருகிறது. முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை கடந்தாண்டு தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக  சின்னமலை- கோயம்பேடு வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.

தற்போது மூன்றாம் கட்டமாக திருமங்கலம் - நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்குகிறது. இந்த மெட்ரோ ரயில் தடத்தில் மொத்தம் 7 குளிரூட்டப்பட்ட சுரங்கப் பாதை ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close