Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தற்காலிகமாக பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை: அரசு அறிவிப்பு

'போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை முறியடிப்போம்' என போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். அதன்படி, வேலைநிறுத்த தினங்களில் பேருந்துகளை முடிந்த அளவுக்கு இயக்க தமிழக அரசு முயற்சி செய்துவருகிறது. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில், தற்காலிக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிகளுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கான பேட்ஜ் மற்றும் உரிமம் உள்ளவர்கள் உடனடியாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாளரை உரிய சான்றிதழ்களோடு அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைநகர் சென்னையில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 2,000 பேருந்துகள் வரை இயக்கப்படும் என அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை, சென்னை பல்லவன் இல்லத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close