Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் : ஸ்தம்பிக்கும் தமிழகம்! #Update

திருச்சி திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து, பேருந்துகளை இயக்க முயன்றவர்களை தாக்கியதாக AITUC மணி, INTUC -.சிவப்பிரகாசம், CITU-சின்னசாமி மற்றும் மூன்று பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்துள்ளது

திருச்சி மத்திய பேருந்துநிலையத்தில் பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு வந்த மற்றொரு ஊழியர், பேருந்தை இயக்க முயற்சித்தார். இதைப் பார்த்த மற்ற ஊழியர்கள், அவரைப் பேருந்தின் பெயர் பலகையைக் கொண்டு தாக்க முயன்றனர். இதனால் அச்சமடைந்த அந்த ஊழியர் பேருந்தை இயக்காமல்  திரும்பிச் சென்றார்.


-சி.ய.ஆனந்தகுமார்

தூத்துக்குடி  தூத்துக்குடி கோட்டத்தில் 7 பணிமனைகள் மூலம் தினமும் 465 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஸ்டிரைக்கால் மாவட்டம் முழுவதும் இன்று, 395 பஸ்கள் இயங்கவில்லை. அ.தி.மு.க தொழிற்சங்கத்தினர் மற்றும் பயிற்சி ஓட்டுனர்கள் மூலம் 67 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் காணப்பட்டாலும் போதிய பஸ்கள் இல்லாததால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

-இ.கார்த்திகேயன்

கன்னியாகுமரி குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வடசேரி, அண்ணா பேருந்து நிலையங்களில் குறைந்த அளவிலே  அரசு பேருந்துகள் இயங்குகின்றன. தனியார் மினி பேருந்துகள் அதிகளவில்  நகருக்குள்  இயக்கப்பட்டு வருகின்றன.

- ராம்குமார்

திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பணிமனைக்கு உட்பட்ட பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுகிறது.

-முரளி

நாகை நாகையில் 25 பேருந்துகளும், திருவாரூரில் 30 பேருந்துகளும் இயக்கம். தனியார் பேரூந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

-ராகவன்

மதுரை மதுரையில் பேருந்துகளை இயக்க வேண்டுமென்பதற்காக, அமைச்சர் செல்லூர்ராஜுவும், கலெக்டர் வீரராகவராவும் பைபாஸ் சாலையிலுள்ள கோட்ட அலுவலகத்திலயே இருக்கிறார்கள். மொத்தமுள்ள 600 பேருந்துகளில் 100 ஐ மட்டுமே இயக்க முடிந்துள்ளது.

- சல்மான்

சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இன்று போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி அரசு போக்குவரத்து மண்டலத்தில் 600 க்கும் மேற்பட்ட பஸ்கள், 11 கிளைகள் இவைகள் எதுவுமே 90% க்கும் மேல் இயங்க வில்லை. அண்ணாதொழிற்சங்க நிர்வாகிகள் கட்டாயத்தால் வேலைக்கு வரும் ட்ரைவர், கண்டக்டர்கள் பஸ்நிலையம்  வெறிச்சொடி கிடைப்பதை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிச் செல்கிறார்கள்.அப்படி செல்லும் ஊழியர்கள் மிரட்டப்படுவதாக சொல்லப்படுகிறது.


 பஸ்கள் இயங்க வேண்டும் என்பதற்காக டி.ஆர்.ஓ, டி.எஸ்.பி ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் பஸ் நிலையத்தில் முகாமிட்டிருக்கிறார்கள். ஆனாலும் தொழிற்சங்க நிர்வாகிகள் ஒத்துக்கொள்ளாததால் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

-தெ.பாலமுருகன்

13-வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஊழியர்கள், நேற்று முதலே வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால், பணிமனை ஊழியர்கள், தற்காலிக ஊழியர்களை வைத்து, பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்தது. ஆனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. குறிப்பாக, சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்திலிருந்து குறைந்த அளவிலான மாநகரப் பேருந்துகளே இயக்கப்படுகின்றன. தாம்பரம்,குரோம்பேட்டை பேருந்துநிலையத்திலிருந்தும், குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.

கோவை: அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டாத்தில் ஈடுபட்டுள்ளதால், கோவை சுங்கம் பணிமனையில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

 

- தி.விஜய்


தஞ்சாவூர் மாவட்டத்தில், 36 அரசுப் பணிமனைகள் உள்ளன. மொத்தம் 560 பேருந்துகள்.  இதில், தஞ்சாவூர் நகரத்தில் 120 டவுன் பஸ்களும்  56 வெளியூர் செல்லும் பஸ்களும்  உள்ளன. வேலை நிறுத்தத்தால், இதில் 90 சதவிகிதப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.


அதேபோல தேனியில் உள்ள ஏழு பணிமனைகளில் 434 பேருந்துகள் உள்ளன. அதில், 32 பேருந்துகள் தற்காலிகப் பணியாளர்களால் இயக்கப்டுகின்றன. மதுரையில் 60 சதவிகிதப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

திண்டுக்கலில் 2-வது பணிமனையில், அரசுப்  பேருந்து  ஓட்டுநர்கள் நெற்றில் நாமம் இட்டு, பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேனி போக்குவரத்து பணிமனையில் வைக்கப்பட்டுள்ள பேனர்.

படம்: வீ.சக்தி அருணகிரி

விழுப்புரம், தமிழ்நாடுஅரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் உள்ள 50 சதவிகித பேருந்துகள்  இயக்கப்படவில்லை.

பெரம்பலூர், அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் உள்ள 110 பேருந்துகளில் இதுவரை ஒரு பேருந்துகூட இயக்கப்படவில்லை. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

ராமேஸ்வரம் கிளையில் 65 பேருந்துகள் உள்ளன. இவற்றில், 10 பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. இதனால், வெளியூர்களிருந்து, ராமேஸ்வரம் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், தங்கள் ஊருக்கு திரும்பிச்செல்ல முடியாமல் அவதியுற்று வருகின்றனர். பேருந்துகள் அனைத்தும் டிப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதே நிலைதான் காஞ்சிபுரம், கோவை, சேலம், நெல்லை, விருதுநகர், கடலூர்,  புதுக்கோட்டை, கரூர், மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர்கின்றன.


இதையடுத்து, தனியார் பேருந்துகள் மற்றும் ரயில்களுக்கு கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பல்வேறு தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில், அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பயணிகள் அவதிப்பட்டுவருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close