Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேலை நிறுத்தம் : போக்குவரத்து தொழிற்சங்கங்களின் புதிய முடிவு இதுதான்!

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், தமிழகமே ஸ்தம்பித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், பேருந்துகளே இயங்கவில்லை. மிகவும் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதால், மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் இன்று  ஆலோசனையில் ஈடுபட்டன.


இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட போக்குவரத்து ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.  இந்நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக, நாளை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


இது குறித்து தொமுச சண்முகம் கூறுகையில், "வேலை நிறுத்தம் 100 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் 99 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை. பேருந்து சேவை குறித்து, அமைச்சர் தவறான தகவலை அளிக்கிறார். இந்த நேரத்தில் வெளிநபர்களை வைத்து பேருந்துகளை இயக்குவது சரியல்ல" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close