Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை! புதிய கமிஷனர் உறுதி

பொதுமக்களின் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர  கமிஷனராகப் பொறுப்பேற்றுள்ள விஸ்வநாதன் உறுதியளித்துள்ளார்.  

விஸ்வநாதன்

சென்னை மாநகர கமிஷனராக இருந்த ஜார்ஜ் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து கரன்சின்ஹா நியமிக்கப்பட்டார். இதனிடையே நேற்று கரன்சின்ஹாவை நீக்கிவிட்டு சென்னை மாநகர கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதனை தமிழக அரசு நியமித்தது. இதையடுத்து இன்று வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார் விஸ்வநாதன்.

இதுகுறித்து விஸ்வநாதன் கூறுகையில்,' பொதுமக்கள் காவல்துறையை சுலபமாக அணுகிப் புகார் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும், பொதுமக்கள் அளிக்கும் புகார்கள்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார். கரன்சின்ஹா சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய கூடுதல் டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close