Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வேலை நிறுத்தம் மிகப் பெரிய தோல்வி அடைந்துள்ளது!' - அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து

13-வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

Minister Vijayabhaskar

அவர் பேசுகையில், '13-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து நடந்த பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டுள்ளதால் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் உள்பட10 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வேலை நிறுத்தம் மிகப் பெரிய தோல்வியில் முடிந்துள்ளது.

இன்றே 75 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இன்று கூடுதல் ரயில்கள், தனியார் பேருந்துகள் சிறப்பாக இயக்கப்பட்டதால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நாளை பணிக்கு திரும்புவர் என்று எதிர்பார்க்கிறோம். ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போரை வைத்து தற்காலிகமாக போக்குரவரத்து சீர்செய்யப்படும். நாளை முதல் 100 சதவிகிதத்துக்கு போக்குவரத்து சீராக்கப்படும். தமிழக முதல்வர் தற்போதுள்ள பிரச்னையை சரிசெய்ய 1,250 கோடி ரூபாய் நிதியை ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளார். அவர்களுக்கு சேர வேண்டிய தொகை படிப்படியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.' என்று தெரிவித்துள்ளார்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close