Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

படுத்து உறங்கும் நூதனப் போராட்டம்! தூத்துக்குடி நகராட்சி அலுவலகத்தை திக்குமுக்காடவைத்த இருவர்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில், முழுமையாக சுற்றுச்சுவர் எழுப்பாமல் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவின் உறவினர் நடத்தி வரும் கடைக்கு விற்பனை பாதிக்காதபடி, சுவற்றில் பாதி இடத்தை விட்டுக் கட்டியுள்ளனர். இந்த இடத்தை, அந்த நபர் ஆக்கிரமித்து வியாபாரப் புழக்கத்துக்காகப் பயன்படுத்திவருகிறார்.  நகராட்சிக்குச் சொந்தமான இந்த இடத்தை நகராட்சி எடுத்துக்கொள்ளாமல், ஆக்கிரமிப்புசெய்த இடத்துக்கு வரி வசூல்செய்து ரசீது கொடுத்துள்ளது.

நகராட்சிக்கு உட்பட்ட முத்தானந்தபுரம் பகுதியில், 3 சென்ட் பரப்பில் இருந்த ஆண், பெண் கழிப்பறைகளை ஆக்கிரமித்து கடைகள் கட்டியுள்ளனர். இதேபோல நகராட்சி குடிநீர் பைப், கிணறு ஆகியவை இருந்த இடங்களையும் தனிநபர்கள் ஆக்கிரமித்து, சொந்த மற்றும் வியாபாரத்துக்குப் பயன்படுத்திவருகின்றனர். இவ்வாறு, கோவில்பட்டி நகராட்சிக்குச் சொந்தமான பல சொத்துகள், தனி நபர்களால் அபகரிக்கப்பட்டு இருக்கின்றன. இவை அனைத்தையும் மீட்டு, ஆக்கிரமிப்புச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி, மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆகியவை உத்தரவு பிறப்பித்தது. இப்படி உத்தரவிட்ட பிறகும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், நகராட்சிப் பொறியாளர் சுப்புலெட்சுமி முன்பு '5-வது தூண்' அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் மற்றும் அந்த அமைப்பின் உறுப்பினர் முருகன் ஆகிய இருவரும் தரையில் படுத்துறங்கியபடியே தங்களது கோரிக்கைகளைக் கோஷங்களாக எழுப்பியவாறு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, படுத்துறங்கும் போராட்டத்தை இருவரும் கைவிட்டனர். இதனால், நகராட்சி அலுவலகத்தில் ஒரு மணிநேரம் பரபரப்பு நிலவியது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close