Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெ., கார் டிரைவரின் மர்ம மரணம்: எம்எல்ஏ ஆறுக்குட்டிக்கு சம்மன்!

aarukutty

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தது தொடர்பான விசாரணையில், நேரில் ஆஜராகும்படி எம்எல்ஏ ஆறுக்குட்டிக்கு சேலம் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராகப் பணியாற்றியவர் கனகராஜ். இவர், கடந்த 28-ம் தேதி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா கொள்ளை மற்றும் காவலாளி கொலை தொடர்பாக தீவிரமாக தேடப்பட்டு வந்த இவர், விபத்தில் சிக்கி மர்மமான முறையில் மரணமடைந்தார். இதுதொடர்பாக, போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 

இந்நிலையில், சேலம் கவுண்டாம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டிக்கு, சேலம் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். விபத்தில் சிக்கி கனகராஜ் மரணமடைவதற்கு முன் அவர், எம்.எல்.ஏ., ஆறுகுட்டிக்கு நான்கு முறை செல்போனில் அழைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில், அழைப்பு வந்ததுகுறித்து விசாரணை நடத்த, ஆறுகுட்டி எம்எல்ஏ., நாளை காலை 10 மணிக்கு ஆத்தூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகும்படி, சேலம் காவல்துறை சம்மன் அளித்துள்ளது. அ.தி.மு.க எம்எல்ஏ-வான ஆறுக்குட்டி, ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் இணைந்தவர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close