Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூன்றாவது நாளாகத் தொடரும் வேலைநிறுத்தம்... சூழலைச் சமாளிப்பாரா விஜயபாஸ்கர்?

தமிழகத்தில் மூன்றாவது நாளாகப் போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தொடர்வதால், பல இடங்களில் அரசுப் பேருந்துகள் இன்றும் இயக்கப்படவில்லை.

13-வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன் தினம் போக்குவரத்துத்துறை  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் போக்குவரத்து ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 

Vijayabaskar

இதையடுத்து, வேலைநிறுத்தம் தொடங்கிவிட்டதைக் கடிதம் மூலமாக அமைச்சரிடம் தெரிவிக்க தொழிற்சங்க நிர்வாகிகள் சென்றனர். கடிதத்தை வாங்க மறுத்த விஜயபாஸ்கர், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதையடுத்து, மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.  தங்களது கோரிக்கையை நிறைவேற்ற அரசு உறுதி அளிக்காததால், வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி தொடங்கும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தன. 

தொழிற்சங்கங்கள் அறிவித்தப்படி, நேற்று முன் தினமே போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நேற்றும் இந்த வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இதனால், தமிழகத்தில் பெரும்பாலான  இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அரசுப் பேருந்துகள் இயங்காததால், மக்கள் தனியார் பேருந்து மற்றும் ஆட்டோக்களைத் தேடிச் சென்றனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலித்தனர். மேலும், பேருந்து நிறுத்தங்களில் கடுமையான வெயிலில் மக்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. 

Vijayabaskar
 

போக்குவரத்து ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ’தமிழகத்தில் 75  சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.  இந்த நெருக்கடியான சூழலைச் சரி செய்ய, தினக்கூலி அடிப்படையில்  ஓட்டுநர்களைத் தேர்வுசெய்து பேருந்துகளை இயக்க உள்ளோம். 100 சதவிகித அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது’ என்று உறுதி அளித்துள்ளார்.  

இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இன்று முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புள்ளதாக  எம்.ஆர்.விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close