Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனியார் பேருந்துகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை..!

'தனியார் பேருந்துகள் அதிகக் கட்டணம் வசூல்செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

 

போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் மூன்றாவது நாளாகத்  தொடர்வதால், தமிழகத்தின் பல பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.13-வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன் தினம் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் போக்குவரத்து ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 


தொழிற்சங்கங்கள் அறிவித்தபடி, நேற்று முன் தினமே போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நேற்றும் இந்த வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இதனால், தமிழகத்தில் பெரும்பாலான  இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அரசுப் பேருந்துகள் இயங்காததால், மக்கள் தனியார் பேருந்து மற்றும் ஆட்டோக்களைத் தேடிச் சென்றனர். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, தனியார் பேருந்துகள் அதிகக் கட்டணம் வசூல்செய்வதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 'விரைவில் அனைத்து போக்குவரத்து ஊழியர்களும் பணிக்குத் திரும்புவார்கள். அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களைப் பணிக்கு வரவிடாமல் தடுத்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார் பேருந்துகள் அதிகக் கட்டணம் வசூல்செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close