Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தி.மு.க எம்எல்ஏ-க்கள் கூட்டத்துக்கு இதுதான் காரணம்..!

தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், எம்எல்ஏ-க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. இதில், தி.மு.க-வின் அனைத்து எம்எல்ஏ-க்களும் பங்கேற்றுள்ளனர். 

m.k.Stalin


தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வைரவிழா கொண்டாடுவதற்கு, மு.க.ஸ்டாலின் ஏற்பாடுகளைச் செய்துவருகிறார். இந்த விழாவுக்கு, நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து, சிறப்பாக நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திடீரென்று தி.மு.க எம்எல்ஏ-க்கள் கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் நேற்று அழைப்பு விடுத்தார். நேற்று திடீரென அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் தொலைபேசி வாயிலாகவே அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை 10 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் எம்எல்ஏ-க்கள் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்துக்கு, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமைதாங்கினார். இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரைக் கூட்டுவதுகுறித்தும், கருணாநிதியின் வைர விழாகுறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சட்டப் பேரவை கூட்டத்தொடரைக் கூட்ட, பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், ஆளுங்கட்சி இதுகுறித்து பதில் ஏதும் அளிக்காத நிலையில், தி.மு.க-வின் அனைத்து எம்எல்ஏ-க்களும் ஆளுநர் வித்யாசாகர் ராவ்வைச் சந்திக்க முடிவு எடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close