Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு மு.க.ஸ்டாலின் வைக்கும் கோரிக்கை இதுதான்..!

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த, தமிழக அரசுக்கு ஆளுநர் உத்தரவிடக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

m.k.stalin


தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில் கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க எம்எல்ஏ-க்கள் அனைவரும் பங்கேற்றனர்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், 'வைரவிழா கொண்டாட்டத்தை ஒட்டி கருணாநிதியைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையைக் கூட்டாமல், எடப்பாடி அரசு வேண்டுமென்றே புறக்கணித்துவருகிறது. சட்டப்பேரவையில் கருணாநிதியின் புகழை, தி.மு.க எம்.எல்.ஏக்கள் பேசுவதைத் தடை செய்வதற்காகவே கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை. ஆளும் அரசுக்குத் துளி அளவும் அரசியல் நாகரிகம் இல்லை. எடப்பாடி பழனிசாமி அரசுக்கு, பேரவையைக் கூட்டினால் ஆட்சி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


ப.சிதம்பரம் வீட்டில் நடைபெறும் சிபிஐ சோதனையை அவர் சட்டப்படி எதிர்கொள்வார். கூட்டத்தொடரை நடத்த ஆளுநர் உத்தரவிடக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வைரவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அந்த விழாவுக்கு சோனியாகாந்தி வருகிறாரா அல்லது ராகுல்காந்தி வருகிறாரா என்பது நாளை உறுதிசெய்யப்படும்' என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close