Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர் ரஜினியை மிரட்டவே இந்த சிபிஐ ரெய்டு - கராத்தே தியாகராஜன் புது விளக்கம்..!

சி.பி.ஐ சோதனையை ஏவிவிடும் பா.ஜ.கவின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் பயப்படாது என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின்  வீடு மற்றும் அலுவலகங்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் 9 பேர் கொண்ட சிபிஐ குழு, அதிரடி ரெய்டு நடத்தி வருகிறது.  இதேபோல டெல்லியிலும்  நொய்டாவிலும் சில குறிப்பிட்ட இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு இருந்த தொடர்பின் அடிப்படையில் ரெய்டு நடைபெற்று வருவதாக, உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ரெய்டு குறித்துக் கருத்து தெரிவித்துள்ள பீட்டர் ஆல்போன்ஸ், 'சி.பி.ஐ-யை பா.ஜ.கவின் சுயநலத்துக்குப் பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது. அன்னிய முதலீட்டுக்கு அனுமதி தருவது நிதி அமைச்சரின் வேலை. அதைத்தான் ப.சிதம்பரம் செய்தார். பா.ஜ.கவின் இத்தகைய செயல் நாடாளுமன்ற ஜனநாயகம் கெட்டுப்போகும் சூழல் உள்ளது. பா.ஜ.கவின் இத்தகைய செயலுக்கு காங்கிரஸ் பயப்படாது' என்றார். சி.பி.ஐ ரெய்டு தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கராத்தே தியாகராஜன், 'அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடைபெறும் சோதனை. இத்தனை ஆண்டுகள் கழித்து சோதனை நடைபெறுவதற்கு காரணம் என்ன?. இந்த சி.பி.ஐ சோதனை மூலம் ரஜினிகாந்திற்கு பா.ஜ.க மிரட்டல் விடுகிறது. ரஜினிகாந்த் புதிதாக அரசியல் கட்சி தொடங்காமல் இருப்பதற்கான மிரட்டல் இது' என்றார். ரெய்டு குறித்து தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.ராமசாமி, 'பா.ஜ.க தமிழகத்தைக் கைவசப்படுத்த நினைக்கிறது. ப.சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ சோதனை நடத்துவதற்கு பா.ஜ.க தான் காரணம். பா.ஜ.கவிற்கு தக்க பதிலடி தரக் கூடியவர் ப.சிதம்பரம்' என்றார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close