Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வு விவகாரம்: தமிழகத்தைக் கைவிட்ட மத்திய அரசு!

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாதென மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தற்போது அறிவித்துள்ளார்.


மருத்துவப் படிப்புகளுக்கு என நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வுகளிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க, தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காகவே, தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுவது நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

பிரகாஷ் ஜவடேகர்


இந்நிலையில், இன்று காலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படாததற்கான காரணத்தை, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கினார். அந்த விளக்க உரையில், மத்திய அரசின் பதிலுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். தற்போது மத்திய அரசு, தமிழகக் கோரிக்கைக்கு பதில் அளித்துள்ளது.


மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், டெல்லியில் தற்போது அளித்துள்ள பேட்டியில், ‘பொது நுழைவுத்தேர்வான நீட் தேர்வுகளிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது. உச்சநீதிமன்றத்தின் விதிமுறையின்படியே இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாகச் செயல்படவோ, மாற்றுக் கருத்தோ தெரிவிக்கப்போவதில்லை. நீட் தேர்வைப் பொறுத்தவரை, மத்திய அரசின் நிலைப்பாடுகுறித்து முன்னரே தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது’ எனக் கூறியுள்ளார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close