Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சி.பி.ஐ சோதனை முடிந்தது; ஹார்டு டிஸ்க் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் - குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரம் மறுப்பு..!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற சி.பி.ஐ சோதனை நிறைவடைந்தது. சோதனையின் முடிவில் அலுவலகங்களிலிருந்து கணினி ஹார்ட்டிஸ்க் மற்றும் ஆவணங்கள் சிலவற்றை சி.பி.ஐ பறிமுதல் செய்து சென்றுள்ளனர். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்பட, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பத்துப்பேர் கொண்ட சி.பி.ஐ குழு காலை முதலே அதிரடி சோதனை செய்தது.

 

இதேபோல டெல்லியிலும் நொய்டாவிலும் மேலும் சில குறிப்பிட்ட இடங்களில் சி.பி.ஐ ரெய்டு நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, மத்திய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியமான எப்.ஐ.பி.பி, தனியார் நிறுவனத்துக்குச் சட்டவிரோதமாக ஒப்புதல் கொடுத்தது தொடர்பாக, சி.பி.ஐ இந்தச் சோதனையை நடத்தி வருகிறது.

சோதனைக்கு இடையில் கார்த்தி சிதம்பரத்திடம் சி.பி.ஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் அலுவலகத்தில் இருந்து ஹார்டு டிஸ்க் மற்றும் ஆவணங்களை சி.பி.ஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், 'அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சி.பி.ஐ சோதனை நடைபெறுகிறது. எனது அப்பாவின் குரலை நெரிப்பதற்காக சோதனை  நடைபெறுகிறது. சி.பி.ஐ அதிகாரிகள் எந்த ஆவணங்களையும் கைப்பற்றவில்லை. குற்றச்சாட்டுகள் எதையும் நிரூபிக்க முடியாது' என்றார். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close