Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து மோதி பெண் பலி

திருப்பூரில் தற்காலிகப் பேருந்து ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து  மோதி ஒரு பெண் பலியாகியுள்ளார்.

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை சமாளிக்க தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. அதன் ஒரு கட்டமாக தற்காலிகப் பேருந்து ஓட்டுநர்களைக் கொண்டு அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

bus

இதனிடையே திருப்பூரில் தற்காலிகப் பேருந்து ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து மோதி பெண் ஒருவர் பலியாகியுள்ளார். கதிரேசன் என்ற ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து நடராஜ் தியேட்டர் சாலையில் பைக்கில் வந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த மற்றொரு பெண் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த அவசரக் கூட்டத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் 62 சதவீதம் இயங்கிய அரசுப் பேருந்துகளை நாளை 100 சதவீதம் இயக்க தனியார் வேன், பேருந்து ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close