Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆர்ப்பரித்த தொழிலாளர்கள்: அந்தப் பக்கமே வராத அமைச்சர்!

போக்குவரத்துத் தொழிலாளர்கள் முற்றுகையிடுவார்கள் என்பதற்காக அமைச்சர் தனது பயணத்தை மாற்றிய சம்பவம் திருச்சியில் அரங்கேறியது.

திருச்சியில் போராட்டம்

போக்குவரத்துத் தொழிலாளர்கள், நேற்று முதல் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.  திருச்சி மண்டலத்தில் 99 சதவிகித பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இந்தப் போராட்டத்தால், ஆம்னி பேருந்துகள் ரூ.1500 வரை வசூல் செய்கின்றனர். திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து மாநகருக்கு 15 பேருந்துகளும், புறநகர்ப் பகுதிகளுக்கு 29 பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டதாகப் போக்குவரத்துக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கூடுதலாக சென்னை, கோவை, பழனி, மதுரை போன்ற முக்கிய ஊர்களுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளில், கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள் வேறு வழியின்றி கூடுதல் பணத்தையும் கொடுத்து பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கூட்டநெரிசல் அதிகமாகவே உள்ளது. இதனால் ரயில்நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதேசமயம் திருச்சி போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளர் மணி, தற்காலிக நடத்துநர், ஓட்டுநர் பணிக்கு ஆள் தேவை என அறிவித்துள்ளார். உரிய ஓட்டுநர், நடத்துநர் உரிமங்கள் பெற்றுள்ளவர்கள் தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் பணிக்காக திருச்சி மண்டல போக்குவரத்துக் கிளை அலுவலக மேலாளரை அணுகக் கூறியுள்ளார்.

இன்று திருச்சி போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு கூடிய போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டு பேருந்து இயக்குவதைத்  தொடங்கி வைக்க வருகை தர இருந்ததால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீஸார் கலைந்து செல்லும்படி வலியுறுத்தினர். இதில் கோபமடைந்த போக்குவரத்துத் தொழிலாளர்கள், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

அந்தவழியே, சில அரசுப் பேருந்துகள் இயக்கப்படவே, கோபமடைந்த போக்குவரத்துத் தொழிலாளர்கள், ’எங்க வாழ்க்கையை அழிக்கிறார்கள். அதுக்கு நீங்கள் துணைக்குப் போகிறீங்களா?’ எனக் கோபமாக திட்டி தீர்த்தனர். அதோடு போக்குவரத்து தொழிலாளர்கள், அமைச்சர் வந்ததால் முற்றுகையிட காத்திருந்தனர். இந்த தகவலறிந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மலைக்கோட்டை டெப்போவில் தற்காலிகப் பேருந்தைத் துவக்கி வைத்ததோடு, நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கிளம்பினார். கடைசிவரை திருச்சி மண்டல போக்குவரத்து அலுவலகத்துக்கு வரவே இல்லை.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய அனைத்து சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி, “திருச்சி மண்டலத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் முழு அளவில் வெற்றிபெற்றுள்ளது. 99 சதவிகித பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதை மறைத்து அமைச்சர் 75 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.  இந்தப் போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். பயிற்சியில்லாத ஐஆர்டி பயிற்சி ஒட்டுநர்கள், பள்ளி வாகன ஓட்டுநர், ஆட்டோ ஓட்டுநர்களைக் கொண்டு பஸ்களை இயக்க முயல்கிறார்கள். இதனால் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். தற்காலிக, அனுபவம் இல்லாதவர்களைக் கொண்டு பேருந்து இயக்கப்படுவது போக்குவரத்து விதிகளுக்கு எதிரானது" என்றார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close