Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்திருப்பவர்களுக்குப் புதிய சிப் ஏடிஎம் கார்டு!

தமிழகம் முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள ஒரு கோடி பேருக்கு, புதிய சிப் பொருத்திய ஏடிஎம் கார்டு வழங்கப்பட உள்ளதாக அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிப் ஏ.டி.எம்


அஞ்சலகத்தில், தபால் மற்றும் பார்சல் சேவையுடன் வங்கிச் சேவைகளும், ஏடிஎம், பாஸ்போர்ட் பெறுதல் போன்ற வசதிகள் தொடங்கப்பட்டுள்ளன. அஞ்சலகத்தில், ரூ.50 இருப்புத்தொகையில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டுவருகிறது. அவர்கள், அஞ்சலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மையத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம்;. சர்வீஸ் சார்ஜ் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்குவதில் ஆர்வம் காட்டினர்.

தமிழகம் முழுவதும் உள்ள அஞ்சலகங்களில், ஒரு கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளனர். இவர்களுக்கு, ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டது. இந்த கார்டுகளை வாடிக்கையாளர்கள் ரெடிமேட் ஷோரூம்கள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் போன்ற இடங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்றாற்போல புதிய எலெக்ட்ரானிக் சிப் பொருத்திய ஏடிஎம் கார்டுகள் வழங்கப்பட இருக்கின்றன. அவற்றை, அனைத்துப் பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close