Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நெடுவாசலுக்காக சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவி!

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவளித்த மாணவி ஒருவர், திருச்சி சிறைக்குள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். 

கடந்த 15-ம் தேதி, சேலத்தைச் சேர்ந்த வளர்மதி, சுவாதி, கோவை தினேஷ்குமார், கார்த்திக் உள்ளிட்ட பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த ஏழு கல்லூரி மாணவர்கள், நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க, கோவையிலிருந்து ரயிலில் கிளம்பினார்கள். 

வரும் வழியில், தேசத் துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுவாதி, வளர்மதி உள்ளிட்டோரை நிர்வாணப்படுத்தி சோதனை என்கிற பெயரில் டார்ச்சர் செய்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இந்நிலையில், மாணவிகளைத் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒரு மாணவி நேற்று மாலையிலிருந்து உண்ணாவிரதம் இருந்துவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாணவியைச் சிறைத்துறை அதிகாரிகள் சமாதானப்படுத்தியும் அதற்கு உடன்பட மறுத்து, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்துவருகிறார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close