Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு..!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், 19 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்  தேர்வு எழுதினர். கடந்த 12 ஆம் தேதி, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அடுத்து, 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு, 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை, www. tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

தேர்வு முடிவுகளை, மாணவர்கள் பள்ளியில் பதிவுசெய்திருக்கும் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், 19 ஆம் தேதியிலிருந்து 22 ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மறு கூட்டலுக்கான கட்டணமாக, தமிழ் மற்றும் ஆங்கிலத்துக்கு தலா 305 ரூபாய் என்றும் மற்ற பாடங்களுக்கு 205 ரூபாய் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close