Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#Alert : இரண்டு நாள்களுக்கு அனல்காற்று வீசும்!

'ஓரிரு இடங்களில் மழை பெய்தாலும், தமிழகத்தில் இன்னும் இரண்டு நாள்களுக்கு அனல்காற்றே விசும்' என, வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

வானிலை அறிக்கை

சென்னையில், இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் ஓரிரு இடங்களிலே மழை பெய்தது. அடுத்து வரும் வாரங்களில் தமிழக வானிலை நிலவரம்குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தர் கூறியதாவது: ‘ஆந்திரக்கடல் பகுதிகளிலிருந்து அதிக வெப்பக்காற்று வீசுவதால், வடதமிழகத்தின் உள்பகுதிகளில் இன்னும் இரண்டு நாள்களுக்கு அனல்காற்று வீசும். வெப்பச்சலனத்தால், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில், அதிகபட்சமாக திருத்தணியில் 45 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது’ என்றார்.

மேலும், ‘தென்மேற்குப் பருவமழை தற்போதுதான் அந்தமான் பகுதிகளில் துவங்கியுள்ளது. இந்த மாத இறுதியில்தான், தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழைகுறித்த விவரங்கள் கண்காணிக்கப்பட்டு வெளியிடப்படும். தற்போது நிகழும் வெப்பச்சலனத்தால், சென்னையின் நகர்ப் பகுதியில், சில இடங்களில் லேசான தூறலுக்கு மட்டுமே வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close