Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி.தினகரனுக்கு ஜாமீன் கிடைக்குமா?

ஜாமீன் கோரி, டி.டி.வி.தினகரன் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ள மனு, நாளை விசாரணைக்கு வருகிறது. 


அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதைத் தொடர்ந்து, இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை டெல்லி காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்த வழக்குத் தொடர்பாக இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜென்ட் எனக் கருதப்படும் நரேஷ் ஆகியோரை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்தனர்.

இதையடுத்து, டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். தற்போது, அவர்கள் இருவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, டி.டி.வி.தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா ஆகியோரது நீதிமன்றக் காவலை மே மாதம் 29-ம் தேதி வரை நீட்டித்து, டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு, நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில், ஜாமீன் கோரி டி.டி.வி.தினகரன் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு, நாளை விசாரணைக்கு வருகிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close