Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மயங்கி விழுந்த ஏ.டி.எஸ்.பி திடீர் மரணம்... அடுத்தடுத்து திருச்சி காவலர்களுக்கு நிகழும் சோகம்!

திருச்சி எஸ்.பி அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பியாக பணியாற்றியவர் கணேசன். இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்திருந்தார் கணேசன். அப்போது அங்கு வந்த சக காவலர்களிடம் பேசிக்கொண்டிருந்த கணேசன், திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். மயங்கி விழுந்த கணேசனை சட்டென அருகிலிருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் உடனிருந்தவர்கள். அங்கு ஏ.டி.எஸ்.பி கணேசனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அதிர்ச்சித் தகவலை கூறினர். 

இதேபோல் திருச்சி தில்லைநகர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த சாமிக்கண்ணு, கடந்த 3-ம் தேதி ஸ்ரீரங்கம் புறக்காவல் நிலையத்தில் பணியிலிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

அடுத்தடுத்து காவலர்கள் மரணம் திருச்சி போலீஸாரிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close