Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மழை வேண்டி தமிழக அமைச்சர் சிறப்பு பூஜை!

மழையில்லாமல் கடும் வறட்சியால் வாடும் தமிழகத்துக்கு மழை வர வேண்டி திருவண்ணாமலை மாவட்டம் படவேடு கிராமத்தில் அமைந்துள்ள அம்மையப்ப ஈஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு யாக பூஜை செய்தனர்.

இன்று காலை 6 மணிக்குத் துவங்கிய பூஜையில் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். ஐந்து கட்டங்களாக பூஜை நடந்து வந்தது. 12 மணிக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பூஜையில் கலந்துகொண்டு, அம்மையப்ப ஈஸ்வரருக்கு வைக்கப்பட்ட கலச நீரை எடுத்துக்கொண்டு கோயிலைச் சுற்றி வந்து, அந்த நீரைக் கோயில் கிணற்றில் ஊற்றிவிட்டு வருண பகவானை வேண்டி பூஜையை முடித்துவைத்தார். இதில் அந்த கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மழை வருமாறு இறைவனை வேண்டினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close