Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'குளம் தூர்வாரும் பணிகளுக்கு ஆட்சியாளர்கள் இடையூறு செய்கிறார்கள்!' - திருச்சியில் குற்றம் சாட்டிய ஸ்டாலின்

தி.மு.க செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று திருச்சி, கரூரில் நடந்த குளங்கள் தூர் வாரும் பணியைப் பார்வையிட்டார். அப்போது ஸ்டாலின், ஆட்சியாளர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் குளங்களைத் தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன. ஆனால், அந்தப் பணிகளுக்கு ஆட்சியாளர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்றார்.

திருச்சி தென்னூரில் உள்ள பெரிய நாச்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவுகொண்ட குளத்தை, கோயில் பரம்பரை அறங்காவலர் குழு மற்றும் அந்தக் கோயிலுக்குச் சொந்தமான குடிமக்கள் இணைந்து நிதி சேர்த்து, வழக்கறிஞர் ரவிக்குமார் தலைமையில் கடந்த மூன்று நாள்களாக குளம் தூர் வாரும் பணிகள் நடந்துவருகிறது. இந்தப் பணியை, மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார்.

இதற்காக, இன்று காலை 11.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானம்மூலம் திருச்சி வந்த ஸ்டாலின், முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான கே.என்.நேரு எம்எல்ஏ தலைமையில் பார்வையிட வந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், 'தமிழகத்தில் தலைவிரித்தாடும் குடிநீர்ப் பிரச்னையை மையமாகவைத்து, மாநிலத்தில் உள்ள குளங்கள் மற்றும் குட்டைகளை, முறையோடு சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியைப் பெற்று, தேவைப்பட்டால் அரசுத் துறைகளைச் சார்ந்திருக்கக்கூடிய அதிகாரிகளின் ஒத்துழைப்போடு தூர் எடுக்க வேண்டும் என, தி.மு.க நிர்வாகிகளுக்கு நான் வேண்டுகோள் வைத்திருந்தேன். அந்தக் குளங்கள் அரசுத் துறையாக இருந்தாலும், அறநிலையத்துறை அல்லது தனியாருக்குச் சொந்தமான குளங்களாக இருந்தாலும் பரவாயில்லை. அதன் அடிப்படையில், கழகம் சார்பில் குளங்கள் தூர் வாரும் பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 

அந்த வகையில், திருச்சி எம்எல்ஏ-வாக இருக்கக்கூடிய கே.என்.நேருவின் தொகுதியில் தனியாருக்குச் சொந்தமான இந்தக் கோயில் குளம் 77 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் தூர் எடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணியைக்கூட நடத்தக்கூடாது என ஆட்சியாளர்கள், அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் எவ்வளவோ மிரட்டல் விடுத்தார்கள். இவர் வந்து செய்யக்கூடாது எனப் பல வழிகளில் தடுத்துப்பார்த்தார்கள். 

இப்படி தமிழகம் முழுவதும் நடக்கக்கூடிய பணிகளை நானே நேரில் சென்று பார்வையிட உள்ளேன். அந்த அடிப்படையில்தான், திருச்சியில் நடக்கக்கூடிய பணியைப் பார்வையிட்டேன். அடுத்து, கரூருக்குப் போகிறேன். போகிற வழியில் குளித்தலை தொகுதியில் நடக்கும் தூர் வாரும் பணிகளைப் பார்வையிட இருக்கிறேன்.

இந்தக் குளத்தைத் தூர் வாரும் பணிக்கு 5 லட்ச ரூபாய் செலவாகியிருக்கிறது. பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. இன்னும் ஐந்தாறு நாள்களில் பணிகள் முழுவதுமாக முடிவடையும்” என்றார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close