Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆறு லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளைக் கடத்திய இருவர் கைது!

தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகில், தென்பாகம் போலீஸார் வாகனச் சோதனையின்போது,  கை காட்டி நிறுத்தச் சொல்லியும், ஒரே பைக்கில் வந்த முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்த மரிய ரகுநாத் ஆகியோர் நிறுத்தாமல் வேகமாகச் சென்றனர். 

சந்தேகத்தில் பேரில் பைக்கை மடக்கிப் பிடித்து விசாரித்ததில், இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளனர். அவர்களிடமிருந்த பையை சோதனையிட்டதில், செல்லாத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கட்டுகளாக இருந்துள்ளன. 

அதில், 223 பழைய 1000 ரூபாய் நோட்டுகள், 754 பழைய 500 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான  நோட்டுகளைக் கைப்பற்றியதோடு, இருவரையும் கைதுசெய்து, விசாரித்து வருகின்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close