Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அம்மாவின் மகளாக வந்திருக்கிறேன்'- ஜெயலலிதா சமாதியில் நடிகை விந்தியா

 

 

இன்று, ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்த நடிகையும் அ.தி.மு.க பேச்சாளருமான விந்தியா, 'நான் அரசியல்வாதியாக வரவில்லை, அம்மாவின் மகளாக வந்திருக்கிறேன்', எனக் கூறியுள்ளார்.

விந்தியா

ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர், பல அரசியல் அதிரடிகள் அவரது சமாதியில் இருந்துதான் தொடங்கின. ஓ.பி.எஸ் முதல் தீபா வரை பலரும் படையெடுத்த ஜெயலலிதாவின் சமாதிக்கு, இன்று திடீர் வருகைதந்தார் நடிகை விந்தியா. இதையடுத்து, ஜெயலலிதா சமாதியில் மாம்பழங்களை வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு, அங்கிருந்த பொதுமக்களுக்கு மாம்பழங்களை வழங்கினார்.

அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'ஒவ்வொரு வருடமும் எங்கள் வீட்டுத் தோட்டத்து மாம்பழங்கள், அம்மா வீட்டுக்குச் செல்லும். இந்த வருடம் இங்கு கொண்டு வந்திருக்கிறேன். அம்மாவின் மரணம் எனக்கு மிகப்பெரிய இடி. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் வெளிவந்துகொண்டிருக்கிறேன். இரண்டு அணிகளாகப் பிரிந்து கிடக்கும் கட்சி இணைய வேண்டும் என்பதே என் விருப்பம். சீக்கிரமே அரசியல்வாதியாக, பேச்சாளராக, அ.தி.மு.க தொண்டராக வருவேன்' எனக் கூறியுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close