Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்த இரண்டு நாள்களுக்கு வீச இருக்கும் அனல்... தயாரா மக்களே..?!

summer

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கிறது. தினந்தோறும் வாட்டிவதைக்கும் வெயிலின் உக்கிரத்தில் இருந்து மக்கள் தப்ப வழியின்றித் திணறிவருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு அனல் அலை அதிகமாக வீசும் என எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. தென் மாவட்டங்களில் நிலவிவந்த உயர் வெப்பம், தற்போது வடதமிழகத்திலும் அதிகரித்துள்ளது. வேலுார், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் சென்னையிலும், வெயிலின் அளவு 40 டிகிரி செல்ஸியஸை கடந்து, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இன்னும் இரு தினங்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், நாகை, விழுப்புரம், வேலுார், புதுச்சேரி உட்பட 24 இடங்களில், அனல் அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். நேற்று காலை சென்னை உட்பட வடதமிழகத்தின் சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்து, குளிர்க்காற்று வீசத் தொடங்கியது. ஆனால், மதிய நேரத்தில் வெப்பம் கடுமையானது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close