Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மழைக்காக யாகம்... உத்தரவிட்ட முதல்வர்... செய்துமுடித்த  கடம்பூர் ராஜு !

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, நேற்று மழைக்காகச் செய்யும் சிறப்பு யாகத்தைத் தொடங்கிவைத்தார்.

edappadi palanisamy
 

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இம்முறை சற்று அதிகமாகவே உள்ளது. வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துவருகிறது. ஏற்கெனவே மழை இல்லாததால் நீர்நிலைகள் வற்றி, பல்வேறு பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். 

நாடு முழுவதும் குடிதண்ணீருக்கே பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் மற்றும் அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயில்களில், நேற்று மழைக்கான யாகத்தை கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார். அந்த யாகம், மகா வர்ண சிறப்பு யாகம் என்று கூறப்படுகிறது. 

காவிரி மேலாண்மை அமைப்பு, நதி நீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் டெல்லியில் 41 நாள்கள் போராடினர். அவர்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், மழை வேண்டி யாகம் செய்துவரும் தமிழக அரசைக் கண்டித்து, விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close