Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லி புறப்பட்டார் அய்யாக்கண்ணு - அடுத்தகட்ட போராட்டம்குறித்து ஆலோசனை?

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 15 விவசாயிகள், டெல்லி புறப்பட்டுச் சென்றனர். 


காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், வங்கிகளில் உள்ள விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடிசெய்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் டெல்லியில் ஒரு மாதத்துக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்வந்தனர். இந்தப் போராட்டத்துக்கு, பா.ஜ.க-வைத் தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்தன. இருப்பினும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுகுறித்து மத்திய அரசு உறுதி அளிக்கவில்லை.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் போராடிய விவசாயிகளை நேரில் சந்தித்து வாக்குறுதி அளித்ததையடுத்து, விவசாயிகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும், மே 21-ம் தேதிக்குள் மத்திய அரசு உத்தரவாதம்  அளிக்காதபட்சத்தில் மீண்டும் போராட்டம் தொடங்குவோம்; இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளை ஒன்று திரட்டிப் போராடுவோம் என்றும் அறிவித்திருந்தனர். மே 21-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள போராட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்க, அய்யாக்கண்ணு திருச்சியிலிருந்து டெல்லி சென்றார். அவருடன் தமிழக விவசாயிகள் 15 பேரும் சென்றனர். டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில், போராட்டத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்கிறார்கள்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close