Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் சிக்கிய 40 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள்... அதிர்ச்சியில் கோடம்பாக்கம்!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில், ரூ.40 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல்செய்து, போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த வழக்கு, வருமான வரித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

demonetised notes
 

சென்னை சூளைமேடு, ஜக்கரியா காலனி இரண்டாவது தெருவில் வசிப்பவர், தண்டபாணி. சென்னை கோடம்பாக்கத்தில்  ராமநாதன் அண்டு சன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். சினிமா படப்பிடிப்புக்குத் தேவையான போலீஸ் சீருடைகளை இந்த நிறுவனத்தில் தண்டபாணி விற்பனைசெய்துவருகிறார். இந்த நிலையில், இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள், போலீஸார் துணையுடன்  அங்கு சோதனை நடத்தினர். அங்கு, ரூ.40 கோடிக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. செல்லாத 40 கோடி ரூபாயைப் பறிமுதல் செய்த காவல்துறை, வழக்குப் பதிவுசெய்து, தீவிர விசாரணை நடத்தியது. இந்த வழக்குகுறித்த விசாரணையை வருமான வரித்துறை இன்றே தொடங்கவுள்ளது. தண்டபாணி, பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் என்று கூறப்படு கிறது. 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close