Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய ஐ.டி துறையில் முதன்முறையாக ஊழியர்கள் சங்கம் அமைக்க முயற்சி!

இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்கள், தென்னிந்தியாவில்தான் தன் தலைமையகத்தை வைத்துள்ளன. பொதுவாக, தென்னிந்தியர்கள் கணினித் தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்களாக இருப்பதுதான் இதற்குக் காரணம். இந்த நிலையில், இந்திய அளவில் முதன்முறையாக ஐ.டி ஊழியர்கள் சங்கம் அமைப்பதற்கான முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

 

'ஃபோரம் ஃபார் ஐடி எம்ப்ளாயீஸ்' (Forum for IT Employees) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஐடி ஊழியர்கள் சங்கத்தில், இதுவரை 100-க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த ஐடி நிறுவன ஊழியரான பி.பரிமளா,  இந்தச் சங்கத்தை உருவாக்க முயல்கிறாராம்.

ஆனால், இந்த முயற்சிகுறித்து ஐடி நிறுவனங்கள் தரப்பு, 'யாருமே இந்த சங்கத்தில் இணைவதுகுறித்து ஆர்வம் செலுத்த மாட்டார்கள். காரணம், ஐடி நிறுவனங்களுக்கு 96 சதவிகித வியாபாரம் வெளிநாடுகளில் இருந்துதான் வருகிறது. இது  உள்ளூர் சந்தை கிடையாது.' என்று கூறுகின்றனர். 

 2015 ஆம் ஆண்டு, டி.சி.எஸ் நிறுவனம் நூற்றுக்கணக்கானோரை அதிரடி பணி நீக்கம் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, ஐடி துறையிலும் ஊழியர் சங்கம் அமைக்கலாம் என்று தமிழக அரசு சட்டத் திருத்தம் செய்தது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close