Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பழநி-கொடைக்கானல் சாலையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

பழநியிலிருந்து கொடைக்கானல் சென்ற கர்நாடகப் பதிவு எண் கொண்ட டூரிஸ்ட் வேன், சவரிக்காடு என்ற இடத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்தின் தகவலறிந்து, பழநியிலிருந்து அந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ் சென்றது. பின் ஆம்புலன்ஸ் மூலம், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close