Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாஸ்மாக் கடை திறப்பு விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்த பதில் இதுதான்..!

'மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த 41 இடங்களில், டாஸ்மாக் கடைகள் அமைக்கப்படவில்லை' என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. 


தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. இந்தக் கடைகளை ஊருக்குள் திறப்பதற்கு தமிழக அரசு முயற்சி செய்துவருகிறது. இதற்கு எதிராக, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பெரும்பாலும் பெண்களே போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

சில இடங்களில், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டும்வருகின்றன. இந்த நிலையில், டாஸ்மாக் கடைகள் அமைப்பது தொடர்பான வழக்கு, இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், 'விதிமுறைகளுக்கு உட்பட்டே டாஸ்மாக் கடைகள் அமைக்கப்படுகின்றன. மேலும், மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த 41 இடங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்படவில்லை' என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close