Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே மரணம் - எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவேவின் இறப்புக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த அனில் மாதவ் தவே, இன்று காலையில் மரணமடைந்தார். இந்நிலையில், அவரது இறப்புக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் கடிதத்தில், 'மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே இறந்த செய்தி அறிந்து, மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். அவர், தான் வகித்துவந்த அமைச்சர் பதவியில் திறம்படச் செயல்பட்டுவந்தவர். அனில் மாதவ் தவேவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 


அதேபோல அனில் மாதவ் தவேவின் இறப்புக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய இரங்கலில், 'அனில் மாதவ் தவேவின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. திறம்படப் பணியாற்றிய அமைச்சரின் மறைவு, பேரிழப்பாகும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close