Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு உயர் நீதிமன்றம் அனுமதி..!

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

 
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம், கடந்தாண்டு மே மாதத்துடன் முடிவடைந்தது. இதனையடுத்து அந்தப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமிக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. இந்நிலையில் புதிய துணைவேந்தர் நியமிக்கப்படாமல் உள்ள நிலையில், பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்தது. மே 19-ம் தேதி பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு பல்கலைகழக ஆட்சிமன்றக் குழு முடிவு எடுத்தது. இதற்கு எதிராக அண்ணாப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பல்கலைக்கழக விதிகளின்படி பட்டமளிப்புவிழாவிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஆட்சிமன்றக் குழு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், 'துணைவேந்தர் கையெழுத்து இல்லாமல் வழங்கப்படும் சான்றிதழ்கள் செல்லாது. இதனால் ஒன்றரை லட்சம் மாணவர்கள்  பாதிக்கப்படுவார்கள்' என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'துணைவேந்தர் கையெழுத்து இல்லாத சான்றிதழ்கள் செல்லாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே பட்டமளிப்பு விழாவிற்கு தடை இல்லை' என்று உத்தரவிட்டனர். இதையடுத்து அண்ணா பல்கலைகழகத்திற்கு நாளை பட்டமளிப்பு விழா நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது. உயர்கல்வித்துறை செயலாளர், துணைவேந்தர் பொறுப்பிலிருந்து பட்டமளிப்பை வழங்குவார் என்று ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close