Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சேகர் ரெட்டி கூட்டாளிகளுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

தொழிலபதிபர் சேகர் ரெட்டி வீட்டிலும், அலுவலகங்களிலும் கடந்த ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அவர் வீட்டிலிருந்து 147 கோடி ரூபாய்க்கு பழைய ரூபாய் நோட்டுகளும், 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் 178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. 

Shekar Reddy


இதையடுத்து சேகர் ரெட்டி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. சேகர் ரெட்டி அளித்த வாக்குமூலத்தின் படி சீனிவாசலு, பிரேம்குமார், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் இந்த வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவந்தனர். இந்நிலையில் அமலாக்கத்துறையினர் 34 கோடி ரூபாய் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பதுக்கியதாக தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்தனர். இந்த வழக்கில், சேகர்ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோரை கடந்த மார்ச் 20-ம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் கடந்த 12-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் சேகர்ரெட்டி உட்பட 3 பேர் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தனர்.  அந்த மனுமீது விசாரணை நடந்தது. அப்போது நீதிபதி எஸ்.பாஸ்கரன் சேகர் ரெட்டி உள்பட 3 பேருக்கு 10 லட்ச ரூபாய்க்கு சொந்த உத்தரவாதமும், 5 லட்ச ரூபாய்க்கு  தலா இரு நபர் உத்தரவாதமும் கொடுத்து, ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி  நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.

இந்நிலையில், சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோருக்கு, அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அவர்கள் இருவருக்கும் ஏற்கெனவே இரு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், தற்போது மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, நாளை காலை அவர்கள் இருவரும், சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close