Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏரிகளைத் தூர்வார நடவடிக்கை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

தமிழ்நாடு முழுவதும் 100 கோடி ரூபாய் திட்டத்தில் 1,519 ஏரிகளில் குடிமராமத்துப் பணி நடைபெற்று வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 
கோயம்புத்தூர் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 7,000 கோடி ரூபாய் வரை இழப்பீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 100 கோடி ரூபாய் திட்டத்தில் 1,519 ஏரிகளில் குடிமராமத்துப் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 300 கோடி ரூபாய் ஒதுக்கி 2,200 ஏரிகள் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

விரைவில் மேட்டூர் அணை தூர்வாரப்படும். தமிழகத்திலுள்ள அனைத்து அணைகளும் தூர்வாரப்பட்டு நீர் பிடிப்பின் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பிரச்னைகள் குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரு அணிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது' என்றார். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close