Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம். 

10th result

இந்த வருட தேர்வு முடிவுகளுக்கு முதல் முறையாக மாணவ, மாணவிகளுடைய மொபைல் எண்ணுக்கு மதிப்பெண்களைக் குறுஞ்செய்தியாகப் பெற்றுக்கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால், பள்ளியில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைலில் குறுஞ்செய்தியாக முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் மே 19 ஆம் தேதி காலையில் இருந்து, மே 22 ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம். தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கான மறுகூட்டலுக்கு 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு 205 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 25-ம் தேதி முதல் மேற்கூறிய இணையதளங்களில் பெற்றுக்கொள்ளலாம். பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுகள் ஜூன் மாத இறுதில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close